பஞ்ச பட்சி சாஸ்திரம் அட்டவணை
உண்மையில் உற்றுக் கவனித்தீர்களானால் வளர் பிறை பகல் தொழில் முறையே ஊண், நடை, அரசு, துயில், சாவு என்று வரும். இரவு ஊண், அரசு, சாவு, நடை, துயில் என்று வரும். அதே போல் தேய்பிறை பகல் ஊண், சாவு, துயில், அரசு, நடை என்றும் இரவில் ஊண், துயில், நடை, சாவு, அரசு என்ற இந்த வரிசையில் வரும். எல்லா பட்சிகளுக்கும் வளர்/தேய் பிறைகளில் ஞாயிறு செவ்வாய், ஒரே மாதிரியான தொழில் இருக்கும். வளர் பிறைகளில் திங்கள், புதன் தேய்பிறைகளில் திங்கள், சனி, பட்சிகளின் தொழில் ஒரே மாதிரி இருக்கும். மற்ற கிழமைகளில் அந்தந்த கிழமைக்கு தகுந்தாற்போல் மாறி வரும்.
அதிகம் குழப்ப விரும்பவில்லை. கீழே ஒரு அட்டவணை தந்திருக்கிறேன் அதைப் பார்த்துக் கொள்ளுங்கள். சூரிய உதயம் காலை 6 மணி என்ற நிலையில் இதைத் தந்திருக்கிறேன். நீங்கள் இருக்கும் நாட்டில் சூரிய உதயம் 6.30 மணி என்றால் அந்த நேரத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.
ஆந்தை – வளர்பிறை
நட்பு : வல்லூறு, காகம்
பகை : மயில், கோழி
ஆந்தை – தேய்பிறை
நட்பு : கோழி, காகம்
பகை : வல்லூறு, மயில்
நட்பு : மயில், ஆந்தை
பகை : காகம், கோழி
வல்லூறு – தேய் பிறை
நட்பு : மயில், காகம்
பகை : ஆந்தை, கோழி
காகம் – வளர்பிறை
நட்பு : ஆந்தை,கோழி
பகை : வல்லூறு, மயில்
காகம் – தேய்பிறை
நட்பு : ஆந்தை, வல்லூறு
பகை : மயில், கோழி
கோழி – வளர்பிறை
நட்பு : மயில், ஆந்தை
பகை : காகம், வல்லூறு
கோழி – தேய்பிறை
நட்பு : மயில், ஆந்தை
பகை : காகம், வல்லூறு
மயில் – வளர்பிறை
நட்பு : வல்லூறு, கோழி
பகை : ஆந்தை, காகம்
மயில் – தேய்பிறை
நட்பு : வல்லூறு, கோழி
பகை : ஆந்தை, காகம்
படத்தை click செய்து பார்த்தால் பெரிதாகத் தெரியும். ஊண் பட்சி நாட்களை மஞ்சள் நிறத்திலும், படு பட்சி நாட்களை சிவப்பு நிறத்திலும் இரண்டும் கலந்து வந்தால் ஆரஞ்சு நிறத்திலும் highlight செய்து உள்ளேன்.
நட்பு பட்சியாக உள்ளவர்களுடன் கூட்டு சேர்வது நன்மை பயக்கும். பகை உள்ளவர்களிடம் சற்று தள்ளியே இருப்பது நல்லது.










No comments:
Post a Comment